QTCC OFFICIAL WEBSITE

Tamil Heritage Month 2019 Video

தமிழர் மரபு எது? என்பது பற்றிய செய்திகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. பின்னோக்கி செல்லச்செல்ல தமிழரின் வாழ்வு சிறப்பானதாகத் தெரிகிறது என்று சொல்லி கதைக்கின்ற ஒரு கூட்டமும் உலவி வருகின்றது. சங்க காலம் என்பது பொற்காலம். சாதி, சமயங்கள் அற்ற, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு அகம் மகிழ்ந்திருந்த காலம் என்றெல்லாம் சங்கப் புகழ் பாடி அதுவே சிறப்புடையது என்று கூறுகின்றவர்கள் உள்ளனர். சங்க காலத்திற்கு மீண்டும் திரும்புவோம் அல்லது சங்க காலம் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய குறிக்கோளாக கொண்டு இயங்குகின்ற பல தமிழ் இயக்கங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. வெளிப்படையாக இவ்வாறு சொல்லாவிட்டாலும், இதுவே இவர்களுடைய உள்ளக்கிடக்கை என்பது இவர்களுடைய பத்திரிக்கைகளில், மாத இதழ்களில், பேச்சுகளில் இருந்து நாம் அறியக்கூடிய செய்தியாகும்.